Love & Family

 அன்புத்தங்கை


தேன்ச்சுவை தங்கையே
     நகைச்சுவை நங்கையே!
சொந்தமோ பந்தமோ அல்ல
     பாசம் நேசம் உள்ள
நெஞ்சத்தால் இணைந்தோம்
     உயிரினில் கலந்தோம்
கேலி கிண்டல் செய்து
     சித்திரங்கள் பல வரைந்து
வாழ்வினில் வளர்ந்தோம் !
     இன்றும் வளர்கிறோம் ! என்றும் வளர்வோம் !
அன்புத்தங்கையே....!



அன்புச்சுவடி


கண்ணே !
கரைந்து போவது உரையாடிய
பொழுதுகளே....
உறைந்து போன நினைவுகள்
அல்ல....!

அன்பே !
நான் உன்னை பிரதிபலிக்கும்
நகல்கள் அல்ல....
உன் கூடவே நடக்கும்
நிழல்கள்....!

1 comment: